×

ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம் சாலையை கடக்க முயன்ற பெண் பைக் மோதி பலி

ஜெயங்கொண்டம்,மார்ச் 24: ஜெயங்கொண்டம் அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. அதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கச்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன். இவரது மனைவி குமரி (40). இவர் நேற்று முன்தினம் இரவு சாலையின் வலது புறத்திலிருந்து இடதுபுறத்துக்கு கடக்க முயன்றார்.

அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிள் கண் இமைக்கும் நேரத்தில் குமரி மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் படுகாயம் அடைந்த குமரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, குமரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம் சாலையை கடக்க முயன்ற பெண் பைக் மோதி பலி appeared first on Dinakaran.

Tags : Paritapam road ,Jeyangondam ,Jayangondam ,Ramakrishnan ,Kachiperumal village ,Wodeyarpalayam ,Ariyalur district ,Kumari ,Parithapam road ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே வயலில் இறந்து கிடந்த மயில்