×

எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளாது. இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மக்களவை தேர்தலில் அதிமுக சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதில், வரும் 28ம் தேதி மற்றும் அடுத்த மாதம் 8 தேதி சுற்றுப்பயண திட்டம் மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறது. 28ம் தேதி மாலை 4 மணி சிவகாசி பாவடி தோப்பு திடலிலும், இரவு 7 மணி மதுரை பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகிலும் நடைபெற உள்ளது. 8ம் தேதி மாலை 4 மணி காரைக்குடியிலும், இரவு 7 மணி ராமநாதபுரம் அரண்மனை அருகிலும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

The post எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,CHENNAI ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Lok Sabha ,in Edappadi ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்