ஜலந்தர்: ஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் உட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் பக்வாரா பகுதியில் இரவில் சிலர், அந்த வழியே தனியாக செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். பியாஸ் நகரை சேர்ந்த வரீந்தர் சிங் என்பவர் இரவில் செல்லும்போது, அவரிடம் இளம்பெண்கள் சிலர் வழிப்பறி செய்துள்ளனர். இதேபோன்று சத்னம்புரா பகுதியை சேர்ந்த அரவிந்தர் குமார் என்ற சபி என்பவரிடமும் வழிப்பறி செய்தனர். இதுகுறித்து இருவரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில், பக்வாரா நகரில் ஜி.டி. சாலையில் இரவில் தனியாக செல்ல கூடிய ஆண்களை இளம்பெண்கள் சிலர் ஆசை காட்டி தனியாக அழைத்து செல்கின்றனர்.
இதன்பின்னர், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு செல்கின்றனர் என தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். துகுறித்து சத்னம்புரா பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி கவுரவ் தீர் கூறுகையில், ‘ஜலந்தர் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாரும் கல்லூரி மாணவிகள் இல்லை. அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களில் 6 பேர் நைஜீரியா மற்றும் கானா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்கள் தான் வழிப்பறியில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்’ என்றார்.
The post பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது appeared first on Dinakaran.