×

திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!: சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தி.நகர்… அதாவது தியாகராயர் நகர் என்ற பெயரை சென்னைவாசிகள் மட்டுமின்றி தமிழக மக்களும் நன்கு அறிந்து வைத்திருப்பர். இந்த பெயர் சர்.பிட்டி தியாகராயரின் நினைவாக வைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் முன்புறம் தியாகராயரின் சிலை கம்பீரமாக அமைந்துள்ளது. இதைப் போலவே இவரது வாழ்வும் அன்னாந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. இவரது வரலாறு பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில்,

பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி! தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர் – நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்! என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

The post திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!: சர்.பிட்டி தியாகராயரின் 173-வது பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Thir ,Dravita ,Piti ,Thiagaraya ,Chief Minister ,K. ,Stalin ,Chennai ,Piti Thiagaraya ,K. Stalin ,Tamil Nagar ,Nagar ,Thiagarayar Nagar ,Dir ,
× RELATED திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில்...