×

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அரசு கல்லூரிகள், தொழிற்சாலைகள் திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்குறுதி

பெரம்பலூர்,மார்ச் 23: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்கள் எந்த வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்யாதவில்லை. இந்நிலையில், 3ம் நாளான நேற்று பகல் 12.12 மணிஅளவில் திமுக வேட்பாளர்அருண் நேரு தனது வேட்புமனுவை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகத்திடம் தாக்கல் செய்தார்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் (திருச்சி வடக்கு) காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, (பெரம்பலூர்) ஜெகதீசன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் உடனிருந்தனர். மாவட்ட தேர்தல் அலுவலருடன் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (பொது) வைத்தியநாதன், தேர்தல் பிரிவு தாசில்தார்கள் அருளானந்தம், சிவா ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அவர் அளித்த பேட்டி:
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முதல்கட்ட பிரச்சாரத்திற்காக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகை தருகிறார். ஆரம்பமே மிகவும் நன்றாக உள்ளது. சிறுகனூரில் இன்று முதல்வர் பிரச்சாரத்தை தொடங்குகிறார். சிறுகனூரில் தொடங்கினால் 40 தொகுதிகளும் நம்முடையதே என்ற முழக்கத்தோடுதான் இன்று பிரச்சாரத்தையும் வாக்கு சேகரிப்பையும் தொடங்கவுள்ளார். நாளை (இன்று 23ம் தேதி) செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. 24ம் தேதி காலை முதல் எங்களது தீவிர பிரச்சாரம் தொடங்கும்.

தொகுதி முழுவதும் ஏரிகள் தூர் வாருவது, வாய்க்கால்கள் புனரமைப்பது, ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவது மற்றும் தரம் உயர்த்துவது. முசிறி மற்றும் துறையூரில் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அருண் நேரு கூறினார்.

The post வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அரசு கல்லூரிகள், தொழிற்சாலைகள் திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : DMK ,Arun Nehru ,Perambalur ,Dinakaran ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ