கூடலூர்,மார்ச்23:கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சி கொல்லி பகுதியில் இரவு நேரத்தில் சாலையை கடந்த சிறுத்தை ஒன்றின் வீடியோ வைரலாகி உள்ளது. வாகனத்தின் ஒளியைப் பார்த்து சாலையில் அங்கும் இங்கும் ஓடிய சிறுத்தை பின் வலது புறம் புதருக்குள் சென்று மறைகிறது. அதில் முன்பக்க வலது காலை சரியாக ஊன்ற முடியாமல் சிறுத்தை தடுமாறுவது போல் காணப்படுகிறது.
பொதுவாக சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகள் ஊனம் ஏற்பட்டாலோ அல்லது வயதானாலோ,வேட்டையாட முடியாமல் மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் வந்து கால்நடைகளை வேட்டையாடுவது வழக்கம். இப்பகுதியில் நடமாடிய சிறுத்தை ஊனம் காரணமாக ஊருக்குள் வந்திருந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பாதுகாக்கவும்,பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மச்சிக்கொல்லி பகுதியில் காலில் காயமடைந்த சிறுத்தையை வனத்துறை கண்காணிக்க கோரிக்கை appeared first on Dinakaran.