×

நோயாளி இதயத்தில் சிக்கிய மருத்துவ சாதனம் அகற்றம்: ரேலா மருத்துவர்கள் சாதனை

தாம்பரம்: சென்னையை சேர்ந்த 39 வயது ஆண் ஒருவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது இதயத்தில் கீமோபோர்ட் குழாய் ஒன்று சிக்கி இருந்தது. 12 செ.மீ நீளம் கொண்ட இந்த குழாய், கீமோதெரபி மருந்துகளை நேரடியாக இரத்த ஓட்டத்தில் செலுத்த பயன்படும் கீமோபோர்ட் எனப்படும் மருத்துவ சாதனத்தின் ஒரு பகுதியாகும். இந்த குழாய் மிதப்பதற்கு பதிலாக, இதயச் சுவருக்குள் இரு முனைகளிலும் சிக்கிக் கொண்டது.

ஒரு முனை வலது ஏட்ரியத்திலும் மற்றொன்று பிரதான நுரையீரல் தமனியிலும் சிக்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து குரோம்பேட்டை பகுதியில் உள்ள ரேலா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கதிரியக்க குழுவினர் இரண்டு மணி நேரத்தில் மிகக் குறைந்த ஊடுருவும் செயல் முறையில் குழாயை வெற்றிகரமாக அகற்றினர். இன்டர்வென்ஷனல் கதிரியக்கம் மற்றும் இமேஜிங் சர்வீசஸ் மூத்த ஆலோசகர் தீபஸ்ரீ தலைமையிலான குழுவினர், இச்சிகிச்சையை மேற்கொண்டனர். சிகிச்கை்கு பிறகு நோயாளி நலமுடன் உள்ளார்.

The post நோயாளி இதயத்தில் சிக்கிய மருத்துவ சாதனம் அகற்றம்: ரேலா மருத்துவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chennai ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!