×

புரோட்டான் பீம் தெரபி பற்றிய பயிற்சி திட்டம்: அப்போலோ புற்றுநோய் மையம் அறிமுகம்

சென்னை : மருத்துவர்களுக்கு புரோட்டான் பீம் தெரபி பற்றிய பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை அப்போலோ புற்றுநோய் மையம் அறிமுகப்படுத்தி உள்ளது. அப்போலோ புற்றுநோய் மையம் (APCC) பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட புரோட்டான் தெரபி சிகிச்சை நிறுவனம் ஐபிஏ (IBA) உடன் இணைந்து புரோட்டான் பீம் தெரபி (PBT) பற்றிய பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது.

சர்வதேச புற்றுநோயியல் நிபுணர்களுக்கான சிறப்பு புரோட்டான் பீம் தெரபி சிகிச்சை பயிற்சி திட்டத்தை நடத்தும் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா முதல் நாடாகும். புரோட்டான் பீம் தெரபி மூலம் இதுவரை 10 மாத ஆண் குழந்தை உள்பட 1400 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. மேலும் புற்றுநோயை எதிர்த்து போராடியவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்த தெரபி மிகவும் உதவியாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்தோனேஷியா மற்றும் வியட்நாமில் இருந்து வந்த மருத்துவர்களுக்கு சமீபத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், புரோட்டான் பீம் தெரபி பற்றிய பயிற்சி அளிக்கும் திட்டம் குறித்து எடுத்துரைக்கும் நிகழ்ச்சி தரமணியில் உள்ள அப்போலோ புற்றுநோய் மையத்தில் நடந்தது. இதில் தலைமை விருந்தினராக இந்தியாவுக்கான பெல்ஜியத்தின் தூதர் டிடியர் வாண்டர்ஹாசெல்ட் கலந்துகொண்டார்.

அப்போது மருத்துவமனையின் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி பேசுகையில், ‘‘இந்த பயிற்சித் திட்டம் எல்லைகளில் தடையின்றி அறிவு பரிமாற்றத்தை எளிதாக்கும். மேலும் இது எங்கள் கூட்டாண்மையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். புரோட்டான் பீம் தெரபி பற்றிய அதிநவீன நுண்ணறிவுகளுடன் இது உலகளவில் புற்றுநோயியல் நிபுணர்களை தயார்படுத்துகிறது. இந்த ஒத்துழைப்பு உலகளவில் புதுமையான சிகிச்சைகளுக்கான அணுகலை ஜனநாயகமயமாக்குவதற்கான எங்களின் ஒருங்கிணைந்த பார்வையின் தெளிவான வெளிப்பாடாகும்’’ என்றார்.

The post புரோட்டான் பீம் தெரபி பற்றிய பயிற்சி திட்டம்: அப்போலோ புற்றுநோய் மையம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Apollo Cancer Center ,Chennai ,APCC ,Belgium ,Proton Therapy Institute IBA ,IBA ,Dinakaran ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...