×

காரில் எடுத்து சென்ற ₹1 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை செங்கம் அருகே உரிய ஆவணம் இன்றி

செங்கம், மார்ச் 22: செங்கம் அருகே உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து சென்ற ₹1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மக்களவை தேர்தலையொட்டி செங்கம் (தனி) சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, செங்கம் அடுத்த செ.சொர்ப்பனந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட ஜி.குப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், தண்டராம்பட்டு வட்டம், அப்புநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஜெயச்சந்திரன்(46) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ₹1 லட்சத்தை எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து செங்கம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகனிடம் ஒப்படைத்தனர். அப்போது, துணை தாசில்தார்கள் ராஜேந்திரன், தமிழரசி, திருநாவுக்கரசு மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர். பின்னர், அந்த பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

The post காரில் எடுத்து சென்ற ₹1 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை செங்கம் அருகே உரிய ஆவணம் இன்றி appeared first on Dinakaran.

Tags : Sengam ,Election Flying Squad ,Separate) ,Assembly ,Constituency ,Lok Sabha ,Squad ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய காவலர் மரணம்..!!