×

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு கோலப்போட்டி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்

 

திருமயம்,மார்ச் 21: திருமயம் அருகே பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருமயம் அருகேயுள்ள தே.பூவம்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுக்கும் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக தே.பூவம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த வாரம் மதுபோடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மண் பானை, குடத்தில் மண் நிரப்பி மொச்சை, சோளம், தட்டை பயிறு, நெல் உள்ளிட்ட தானிய விதைகள் கொண்டு முளைக்க வைத்து பராமரித்து வந்தனர். இதனிடையே நேற்று முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சிக்காக பாத்திரத்தில் முளைத்த தானிய பயிர்களை மலர்களை கொண்டு அலங்காரம் செய்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று பிள்ளையார் ஊரணியில் கொட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர். இதே போல் அதிகாரிபட்டி, ஆண்டிபட்டி, தேக்காட்டூர் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து அப்பகுதி பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விவசாயம் வளம் பெறவும், நோய் நீங்கி அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழவும் ஆண்டுதோறும் இது போன்ற விழாஅப்பகுதியில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு கோலப்போட்டி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : Kolappoti Muthumariamman temple ,mulaiparri ,Tirumayam ,Mulai Pari ,Panguni festival ,Muthumariamman temple panguni festival ,Te.Phuvampatti ,Thirumayam ,Kolapotti Muthumariamman temple ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே வழக்கு...