×

நாடாளுமன்றத் தேர்தல் பணியில் 10,970 அலுவலர்கள்

 

ஈரோடு, மார்ச் 21: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா கலந்து கொண்டு, தேர்தல் நாளன்று பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பணிகளை கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்துவைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, வாக்குப்பதிவு நாளன்று பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்களில் 2,666 முதன்மை அலுவலர்களும், 2,666 முதல் நிலை அலுவலர்களும், 2,666 இரண்டாம் நிலை அலுவலர்களும், 2,666 மூன்றாம் நிலை அலுவலர்களும், 306 நான்காம் நிலை அலுவலர்களும் என மொத்தம் 10,970 பேர் பணியாற்ற உள்ளனர். மொத்தம் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளில் 1,200 பேருக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட 255 வாக்குச்சாவடிகள் உள்ளன.

தேர்தல் குறித்த புகார்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-0424 செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலமாக 18 புகார்கள் வரப் பெற்றுள்ளன. மேலும், 1950 என்ற எண் மூலமாக 1 புகாரும், C Vigil செயலி மூலமாக 10 புகார்களும் பெறப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் சாந்தகுமார் (ஈரோடு), கவிதா (ஆவின்), கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ரகுநாதன் (தேர்தல்) முஹம்மது குதுரத்துல்லா (பொது), அலுவலக மேலாளர் பாலசுப்பரமணியம், தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர், கணினி இயக்குனர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

The post நாடாளுமன்றத் தேர்தல் பணியில் 10,970 அலுவலர்கள் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Parliamentary Elections ,Erode Collector ,District Election Officer ,Collector ,Rajagopal Sunkara ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...