×

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து சேப்பாக்கம் பகுதியில் நாளையும் 26ம் தேதியும் போக்குவரத்து மாற்றம்: மாநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

சென்னை, மார்ச் 21: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து, நாளை மற்றும் 26ம் தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை: டாடா ஐபிஎல் சீசன்-2024 சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு கீழ்க்கண்ட சாலைகளில் நாளை மற்றும் வரும் 26ம் தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு:
 பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்லலாம்.
 வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல அனுமதி இல்லை.
 பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது.
 வாலாஜா சாலை- பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் செல்லலாம்.
 வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
 கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.
 ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.
 பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.
 எம்.டி.வி. ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.
 வாலாஜா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலைக்கு செல்வதற்கு அனுமதி இல்லை.
 பி மற்றும் ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
 காமராஜர் சாலையில் இருந்து வரும் எம்.டி.வி ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
 காமராஜர் சாலையில் இருந்து வரும் பி மற்றும் ஆர் ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.
 உழைப்பாளர் சிலையில் இருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள்
 அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை உட்புற சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
 போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை உட்புற சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.
 காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள கடற்கரை உட்புற சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

The post ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து சேப்பாக்கம் பகுதியில் நாளையும் 26ம் தேதியும் போக்குவரத்து மாற்றம்: மாநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chepauk ,IPL cricket ,City ,Chennai ,Chennai City Traffic Police ,Chepakkam ,City Traffic Police ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...