×

பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதாக தொடர்பட்ட வழக்கு பொய் வழக்கு என நீதிமன்றம் தீர்ப்பு

போப்பால்: கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாக மத்தியப் பிரதேசத்தில் 17 இஸ்லாமியர்கள் கைது செய்யபட்டனர். 7 ஆண்டுகள் கடந்த நிலையில், அது ஜோடிக்கப்பட்ட வழக்கு எனக்கூறி நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது.

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. அதனைக் கொண்டாடியதாக ம.பி. மாநிலம் மொஹட் என்ற கிராமத்தில் 17 இஸ்லாமியர்கள், 2 சிறார்களை போலீசார் கைது செய்தனர். புகாரளித்த இந்து மதத்தைச் சேர்ந்தவரும், அரசு சாட்சியும் போலீசாரின் அழுத்தத்தால் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது அது ஜோடிக்கப்பட்ட வழக்கு எனக்கூறி நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.

கைது, சிறை, போலீசாரின் தாக்குதல், தேசத்துரோகிகள் என அவதூறு என எல்லாவற்றையும் சுமந்த அவர்கள், விடுதலை ஆக 7 ஆண்டுகள் ஆகியுள்ளது. 17 பேரில் 2 குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் 2019ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்திற்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை, டிவி.யில் கூட ஊர் மக்கள் யாரும் பார்ப்பது இல்லை என கிராமத்தின் தலைவர் கூறியுள்ளார்.

The post பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதாக தொடர்பட்ட வழக்கு பொய் வழக்கு என நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Bhopal ,Madhya Pradesh ,2017 Champions Trophy ,Dinakaran ,
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...