×

தேவைக்கு ஏற்ப போதிய சேவை இல்லாததே காரணமா?.. வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் ரத்து: 3 ஆண்டுகளில் ரூ.1,230கோடி ரயில்வே வசூல்..!!

சென்னை: வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலில் இருந்த டிக்கெட்டுகளை பயணிகள் ரத்து செய்ததன் மூலம் ரயில்வேக்கு 3 ஆண்டுகளில் ரூ.1,230கோடி கிடைத்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக்பாண்டி, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகத்திடம் தகவல்களை பெற்றுள்ளார். அதில் 2021ம் ஆண்டு காத்திருப்பு பட்டியலில் இருந்து 2கோடியே 53லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் இருந்து இந்திய ரயில்வேக்கு 242கோடியே 68லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டில் காத்திருப்பு பட்டியலில் இருந்த 4கோடியே 60லட்சம் டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ரூ.439.16 கோடி கிடைத்ததாகவும், 2023ம் ஆண்டில் 5கோடியே 26லட்சம் டிக்கெட்டுகள் பயணிகள் ரத்து செய்ததில் ரூ.505 கோடி கிடைத்ததாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் 45.86 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. அதன் மூலம் ரூ.43கோடி ரூபாய் வருவாய் வந்திருக்கிறது. ரயில் பயணத்தை பயணிகள் அதிகம் விரும்பும் நிலையில் தேவைக்கு ஏற்ப போதிய சேவை இல்லாததையே இது காட்டுகிறது. மேலும், 720 இருக்கைகள் உள்ள ஒரு ரயிலுக்கு 600 இருக்கைகள் வரை காத்திருப்பு பட்டியலை வழங்குவது ஏன்? எனவும் கேள்வி முன்வைக்கப்படுகிறது.

The post தேவைக்கு ஏற்ப போதிய சேவை இல்லாததே காரணமா?.. வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் ரத்து: 3 ஆண்டுகளில் ரூ.1,230கோடி ரயில்வே வசூல்..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Railways ,Vivekpandi ,Madhya Pradesh ,Ministry of Railways ,Dinakaran ,
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்