×
Saravana Stores

வனத்துறையின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள்

 

சேந்தமங்கலம், மார்ச் 20: கொல்லிமலையில், வனத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட வன அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வந்த ராஜாங்கம், இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய வன அலுவலராக கலாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். கொல்லிமலையில் வனத்துறையின் சார்பில், பல்வேறு பொழுதுபோக்கு மையங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை மாவட்ட வன அலுவலர் கலாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், படிக்கட்டுகள் சீரமைப்பு, சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை வன அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பி குளிக்க செல்லும் இடமாக உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், வனத்துறை சார்பில் பாதுகாப்பு பணியை முழுமையாக செய்து முடிக்க வேண்டும். தற்போது மழை இல்லாததால் நீர்வீழ்ச்சியில், தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

எனவே, பாதுகாப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், வயது முதிர்ந்தவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதிக்க கூடாது என வனத்துறையினரிடம் தெரிவித்தார். எக்காரணத்தைக் கொண்டு மாலை 5 மணிக்குள் நீர்வீழ்ச்சியின் நுழைவாயில் அடைக்கப்பட வேண்டும். அதற்கு மேல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது என தெரிவித்தார். தொடர்ந்து அரப்பளீஸ்வரர் கோயில் எதிரே வனத்துறையின் சார்பில், சிறுவர் பூங்கா பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு, கோடை விடுமுறைக்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், தடுப்பு சுவர் கட்டும் பணி, மலைப்பாதை அமைக்கும் பணி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். ஆய்வின்போது, கொல்லிமலை வனச்சரகர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.

 

The post வனத்துறையின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Senthamangalam ,Kollimalai ,Rajangam ,Namakkal ,District ,Dinakaran ,
× RELATED ஓவியம், கட்டுரை போட்டியில்...