×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக போக்குவரத்து ஓய்வூதிய சங்கம் அமைதி பேரணி: வாக்காளர் அட்டையுடன் சென்றதால் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி அரசு போக்குவரத்து ஓய்வூதிய சங்கத்தினர் வாக்காளர் அட்டையுடன் அமைதி பேரணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பணியாற்றிய போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள், அரசு போக்குவரத்து ஓய்வூதிய நலம் மீட்பு சங்கம் ஆகியோர் சார்பில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைதி பேரணி நடைபெற்றது.

இதில், அரசு போக்குவரத்து ஒய்வூதிய சங்க மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில், 50க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் சார்பில், ஓய்வு பெற்று ஓய்வூதியத்தில் அகவிலைப்படி உயர்த்தி தனது 2015ம் ஆண்டு முதல் இன்று வரை வழங்கப்படாததை கண்டித்தும், ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும்,

ஓய்வு ஊதியத்தை உயர்த்தி தராமல் குறைவாக ஓய்வூதியம் வழங்கி வருவதால் வறுமையில் வாழ்ந்து வருவதாக கண்டித்தும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள காவலன்கேட் பகுதியில் இருந்து அமைதி பேரணியாக வந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் அட்டையை திரும்ப அளிப்பதாக கூறி உதவி கலெக்டரை சந்தித்து பேசினார்.

அப்போது, உங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்ய அரசுக்கு அனுப்புவதாக, உதவி கலெக்டர் தெரிவித்தபின், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். வாக்காளர் அட்டையை திருப்பி அளிக்கப்போவதாக, பேரணியாக வந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக போக்குவரத்து ஓய்வூதிய சங்கம் அமைதி பேரணி: வாக்காளர் அட்டையுடன் சென்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Transport Pension Association ,Kanchipuram ,Government Transport Pensioners Association ,Tamil Nadu Government Transport Corporation ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...