×

விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு

வேலூர், மார்ச் 20: விழுப்புரம்-திருப்பதி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென்மத்திய ரயில்வேயில் திருப்பதி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருவதால் விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.32 மணிக்கு புறப்படும், வண்டி எண் 16854 விழுப்புரம்-திருப்பதி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று தொடங்கி வரும் 23ம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. அதேபோல் மதியம் 1.40 மணிக்கு திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி புறப்படும் திருப்பதி-விழுப்புரம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. இந்த ரயில் மறுமார்க்கத்தில் மாலை 4.30 மணிக்கு காட்பாடியில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும். இந்த நடைமுறை நேற்று தொடங்கி வரும் 23ம் தேதி வரை தொடரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Vellore ,Villupuram ,Tirupati ,South Central Railway ,Villupuram… ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...