×

₹1.85 லட்சம் சிக்கியது

பண்ருட்டி, மார்ச் 20: பண்ருட்டி சென்னை சாலை எல்.என்.புரம் பகுதியில் பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், போலீசார் சுரேஷ் ஆகியோர் நேற்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், எந்தவித ஆவணமும் இன்றி ரூ.1.85 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது.இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், செங்கல்பட்டை சேர்ந்த கிருஷ்ணன் என்பதும், இந்த தொகையை எந்தவித ஆவணங்களும் இன்றி எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.1.85 லட்சத்தை பறிமுதல் செய்து பண்ருட்டி தாசில்தார் ஆனந்த்திடம் ஒப்படைத்தனர்.பின்னர் முறையான ஆவணங்களை எடுத்து வந்து காண்பித்த பிறகு, கிருஷ்ணனிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.

The post ₹1.85 லட்சம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Panruti ,District ,Development Officer ,Shakti ,Election Flying Squad ,Sub ,Inspector ,Pushparaj ,Suresh ,Panruti Chennai Road L.N. Puram. ,Dinakaran ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு