×

போலி ஆவணம் தயாரித்து வீடு வாங்கிய தந்தை, மகள் கைது

வடலூர், மார்ச் 19: குறிஞ்சிப்பாடி இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் கமலேந்திரன்(50). இவர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வெள்ளியக்குடி கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்பவருடன் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கருணாகரன் உதவியுடன் கமலேந்திரன் அவரது மகள் டினோஜா(26) ஆகியோர் ஆதார் கார்டு உள்பட அனைத்து ஆவணங்களையும் போலியாக தயாரித்துள்ளனர். பின்னர் டினோஜா, சுமதி ஆகிய இருவர் பெயரில் குறிஞ்சிப்பாடியில் நந்தவன தெருவில் உள்ள பெருமாள் என்பவரின் வீட்டை ரூ.35 லட்சத்துக்கு வாங்கி கூட்டு பட்டாவில் குறிஞ்சிப்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்து உள்ளனர்.

இந்நிலையில் டினோஜா பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது நடந்த விசாரணையில் இலங்கையை சேர்ந்த இவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து வீடு வாங்கியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து குறிஞ்சிப்பாடி வடக்கு கிராம நிர்வாக அலுவலர் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், கமலேந்திரன், அவரது மகள் டினோஜா, இவர்களுக்கு உடந்தையாக இருந்த நண்பர் கருணாகரன், அவரது மனைவி சுமதி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து கமலேந்திரன், அவரது மகள் டினோஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள கருணாகரன், அவரது மனைவி சுமதியை தேடி வருகின்றனர்.

The post போலி ஆவணம் தயாரித்து வீடு வாங்கிய தந்தை, மகள் கைது appeared first on Dinakaran.

Tags : Vadalore ,Kamalendran ,Kurinchipadi ,Rehabilitation Home ,Karunakaran ,Velliakudi ,Chethiyathoppu ,Dinakaran ,
× RELATED தேர்தல் காலங்களில் ேமாசமான சட்ட வரம்பு மீறல்களை பாஜ அரசு செய்கிறது