×

கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கினார்கள். இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த நிலையில் 15 பேர் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் புதைந்து இறந்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Garden Reach ,West Bengal, Kolkata ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...