×

அல்கராஸ் மீண்டும் சாம்பியன்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்தார். பைனலில் ரஷ்யாவின் டானில் மெத்வதேவ் (28 வயது, 4வது ரேங்க்) உடன் மோதிய நடப்பு சாம்பியன் அல்கராஸ் (20 வயது, 2வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீண்ட முதல் செட்டை 7-6 (7-5) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

அதே வேகத்துடன் 2வது செட்டில் அதிரடியாக விளையாடி மெத்வதேவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 7-6 (7-5), 6-1 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. பாரிபா ஓபனில் அல்கராஸ் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கோப்பையை தக்கவைத்தார். கடந்த ஆண்டு பைனலிலும் மெத்வதேவை வீழ்த்தியே அவர் சாம்பியனாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post அல்கராஸ் மீண்டும் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Alcazar ,Spain ,Carlos Algarz ,BNP Paribas Open ,Russia ,Danil Medvedev ,Algaras ,Dinakaran ,
× RELATED சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்