×

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ்

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் தகுதி பெற்றார். 4வது சுற்றில் பிரான்சின் யுகோ ஹம்பர்ட் (26 வயது, 16வது ரேங்க்) உடன் நேற்று மோதிய ஸ்பெயின் நட்சத்திரம் அல்கராஸ் (21 வயது, 3வது ரேங்க்) 6-3, 6-4 என முதல் 2 செட்களையும் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 3வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஹம்பர்ட் 6-1 என்ற கணக்கில் கைப்பற்ற, ஆட்டம் விறுவிறுப்பானது.

இதைத் தொடர்ந்து 4வது செட்டில் இரு வீரர்களும் விடாப்பிடியாகப் போராடினர். அதில் பதற்றமின்றி விளையாடி புள்ளிகளைக் குவித்த கார்லோஸ் அல்கராஸ் 6-3, 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி நேரத்துக்கு நீடித்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவோலினி – மேடிசன் கீஸ் (அமெரிக்கா) நேற்று மோதினர். அதிரடியாக விளையாடிய ஜாஸ்மின் 6-3 என முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற, டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த 2வது செட்டில் மேடிசன் கீஸ் 7-6 (8-6) என வென்று பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட்டில் அனல் பறந்தது. அதில் இரு வீராங்கனைகளும் 5-5 என சமநிலை வகித்தபோது, மேடிசன் கீஸ் காயம் காரணமாக போட்டியில் இருந்து கண்ணீர் மல்க விலகினார். இதையடுத்து ஜாஸ்மின் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் விளையாட தகுதி பெற்றார். இப்போடி 2 மணி, 23 நிமிடத்துக்கு நடந்தது.

The post விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ் appeared first on Dinakaran.

Tags : Wimbledon ,Carlos ,LONDON ,Carlos Algarz ,Wimbledon Grand Slam tennis ,Spain ,France ,Hugo Humbert ,Wimbledon Tennis ,Dinakaran ,
× RELATED லண்டன்-டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்