×

ஆதி திராவிடர் மக்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாக்களை திரும்பப் பெற அரசுக்கு உத்தரவிட இயலாது: ஐகோர்ட் மறுப்பு

சென்னை: ஆதி திராவிடர் மக்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாக்களை திரும்பப் பெற அரசுக்கு உத்தரவிட இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 1998ல் வீடுகள் இல்லாத எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 91 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

1998ல் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாக்களில் இதுவரை யாரும் வீடு கட்டாததால் திரும்பப் பெறக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தனிநீதிபதி தலைமையில் விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி, வீட்டுமனை பட்டாக்களை திரும்பப் பெற உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்வில் நாராயணசாமி என்பவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இத்தகைய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று வந்தது, அப்போது பேசிய நீதிபதிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வீடுகள் கட்டாமல் இருக்கலாம் என தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்தது. மேலும் எஸ்.சி., எஸ்.டி. மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post ஆதி திராவிடர் மக்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாக்களை திரும்பப் பெற அரசுக்கு உத்தரவிட இயலாது: ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : ICourt ,CHENNAI ,Madras High Court ,S.C., S.D. ,Dinakaran ,
× RELATED உள்நாட்டு விமானத்தில் தங்க கட்டி கொண்டு வரலாமா?: ஐகோர்ட் கேள்வி