×

பிரதமர் மோடி ஆந்திராவில் பிரசாரம்: காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீது கடும் தாக்கு

திருமலை: ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கூட்டணி இணைந்து நடத்திய முதல் தேர்தல் பிரசார பிரஜாகலம் மாநாடு சிலக்கலூர்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இன்று ஆந்திராவில் முதல் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்துள்ளேன். ஜூன் 4ம் தேதி வெளியாகும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் தேசிய முற்போக்கு கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

வளர்ச்சி அடைந்த ஆந்திராவை பார்க்க வேண்டும் என்றால் 400 இடங்களில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனவே தேர்தலில் தேசிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் விதமாக வாக்களிக்க வேண்டும். என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ள சந்திரபாபு, பவண்கல்யாண் இருவரும் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து டபுள் இன்ஜின் அரசு தேவை என்பதை உணர்ந்து இணைந்துள்ளனர்.

இந்த 5 ஆண்டுகளில் ஆந்திர மாநில வளர்ச்சி முழுவதுமாக முடங்கியுள்ளது. ஆந்திர மாநில மக்கள் கவனிக்க வேண்டியது காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டும் வேறு அல்ல. இரண்டும் ஒரு உறையில் உள்ள கத்தி. மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தால் வளர்ச்சி பெற்ற ஆந்திர மாநிலத்தை உருவாக்கலாம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன்கல்யாண் பேசினர்.

* ஒன்றிய அமைச்சர்களுக்கு மோடி திடீர் உத்தரவு
பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் அனைவரும் அடுத்த 5 ஆண்டு கால புதிய ஆட்சியில் முதல் 100 நாட்கள் என்னென்ன பணிகள் செய்ய இருக்கிறார்கள், அதை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது என்பது குறித்து அந்தந்த அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளை சந்தித்து செயல்திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

The post பிரதமர் மோடி ஆந்திராவில் பிரசாரம்: காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மீது கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Andhra Pradesh ,Congress ,YSR ,Tirumala ,first election campaign ,Prajakalam conference ,BJP ,Telugu Desam ,Janasena alliance ,Chilakalurpet ,Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…