×

பத்மஜா வேணுகோபாலுக்கு பாஜ தலைவர் கடும் எதிர்ப்பு நேற்று கட்சிக்கு வந்த ஒருவருக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கலாம்?

திருவனந்தபுரம்: காசர்கோட்டில் நடந்த பாஜ தேர்தல் பிரசார நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பத்மஜா வேணுகோபாலை அழைத்ததற்கு முன்னாள் மாநிலத் தலைவர் பத்மநாபன் மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காசர்கோடு தொகுதி பாஜ தேர்தல் பிரசார தொடக்க விழா நடைபெற்றது. இதில் சமீபத்தில் பாஜவில் சேர்ந்த பத்மஜா வேணுகோபால் மற்றும் காசர்கோடு மாவட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக பாஜ தேசிய கவுன்சில் உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான பத்மநாபனை அழைத்திருந்தனர். ஆனால் திடீரென குத்துவிளக்கு ஏற்றுவதற்காக பத்மஜா வேணுகோபால் அழைக்கப்பட்டார். இது பத்மநாபனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரும் குத்துவிளக்கு ஏற்றுவதற்காக எழுந்து நின்றபோது அவர் நாற்காலியிலேயே அமர்ந்திருந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பத்மநாபன் அங்கிருந்து சென்று விட்டார்.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின் பத்மநாபன் நிருபர்களிடம் கூறியது: பாஜ ஆட்சியில் இருப்பதால் தான் மற்ற கட்சியிலிருந்து இங்கு வருகின்றனர். இந்தக் கட்சிக்கு என்று ஒரு ஒழுக்கம் உள்ளது. கட்சியை வளர்ப்பதற்காக பாடுபட்ட பலர் இருக்கும் போது நேற்று கட்சிக்கு தாவிய ஒருவருக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

The post பத்மஜா வேணுகோபாலுக்கு பாஜ தலைவர் கடும் எதிர்ப்பு நேற்று கட்சிக்கு வந்த ஒருவருக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கலாம்? appeared first on Dinakaran.

Tags : BJP ,Padmaja Venugopal ,Thiruvananthapuram ,president ,Padmanabhan ,Kasaragod ,Kasargod ,
× RELATED சசி தரூர் மீது போலீஸ் வழக்கு