×

பழங்குடி பெண்களுக்கு நடமாடும் சிற்றுண்டி வாகனம்

 

நாகப்பட்டினம்,மார்ச்17: வேளாங்கண்ணியில் பழங்குடி நல வாரியம் சார்பில் நடமாடும் சிற்றுண்டி வாகனத்தை பழங்குடி பெண்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். வேளாங்கண்ணியில் பழங்குடி நல வாரியம் சார்பில் நடமாடும் சிற்றுண்டி வாகனம் ₹15 லட்சம் மதிப்பில் இலவசமாக பழங்குடி பெண்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் விதமாக வழங்கப்பட்டது. இந்த வாகனமானது டீ, காபி மற்றும் டிபன், வடை, பிரட் ஆம்லெட், குளிர்பாகனங்கள், ஐஸ்கிரீம் போன்ற அனைத்து விதமான பொருட்களும் நடமாடும் வாகனத்தின் மூலம் விற்கப்படும். வேளாங்கண்ணியை சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வண்டி மூலம் பழங்குடி பெண்கள் தொழில் செய்வதற்கு வசதியாக வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்முறையாக நடைமுறைப்படுத்த உள்ளது. நாகப்பட்டி னம் தாட்கோ மேலாளர் சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் ரேணுகாதேவி, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானாசர்மிளா, துணைத்தலைவர் தாமஸ்ஆல்வா எடிசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பழங்குடி பெண்களுக்கு நடமாடும் சிற்றுண்டி வாகனம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Collector ,Janitam Varghese ,Tribal Welfare Board ,Velankanni ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்