×

தூத்துக்குடியில் தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி, மார்ச் 17:தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் குழுவினருக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடந்தது. தொடர்ந்து பறக்கும்படை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும்படை குழுவினருக்கான பயிற்சிக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமை வகித்து பேசியதாவது: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகள் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 54 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும்படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது கண்காணிப்பாளர் நிலையில் பிறதுறை அலுவலர்கள் தலைமையில் ஒரு சிறப்பு இன்ஸ்பெக்டர், 2 காவலர்கள் மற்றும் ஒரு கேமராமேன் ஆகியோர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் தங்களுக்கு நியமிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்கள் பெறப்படும்போது சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று புகார் குறித்து ஆய்வு செய்து விதி மீறுபவர் மீது தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றார்.இந்த பயிற்சியில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், கோட்டாட்சியர் பிரபு, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உலகநாதன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, தேர்தல் பறக்கும்படை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மொத்தம் 18 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. வாகனத்திற்கு 5 நபர்கள் இடம் பெறுகின்றனர். அனைத்து வாகனத்திலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 3 ஷிப்ட்டுகளாக பறக்கும்படையினர் பணியாற்று வார்கள். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post தூத்துக்குடியில் தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tuticorin ,District Collector ,Lakshmipathi ,Election Flying Squad ,Tuticorin District Collector ,
× RELATED கோடைவெயில் தாக்கம் எதிரொலி...