×

பாஜ நிர்வாகி குஷ்புவை கண்டித்து பரமக்குடி திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்

பரமக்குடி, மார்ச் 16: கலைஞரின் மகளிர் உரிமை தொகை பெரும் பயனாளிகளை இழிவாக பேசிய பாஜ நிர்வாகி குஷ்புவை கண்டித்து அவரது உருவப்படத்தை எதிர்த்து பரமக்குடி திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டமான கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பயனாளிகளை இழிவாக பேசிய பாஜ நிர்வாகியும் நடிகையுமான குஷ்புவை கண்டித்து தமிழக முழுவதும் திமுக மகளிர் அணியினர் குஷ்புவின் உருவப் பொம்மையை எரித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக மகளிர் அணி செல்வி தலைமையில், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அமிர்தவல்லி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சர்மிளா உள்ளிட்டோர் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே குஷ்புவின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி நகர் வடக்கு செயலாளர் ஜீவரத்தினம், கவுன்சிலர்கள் பிரபா, ராதா, மகளிர் அணி நிர்வாகி சிவசக்தி, உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.

The post பாஜ நிர்வாகி குஷ்புவை கண்டித்து பரமக்குடி திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Paramakkudi ,DMK ,BJP ,Khushbu ,Khushpu ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு