×

எண்ணெய் மறுசுழற்சி விழிப்புணர்வு கூட்டம்

 

ஈரோடு, மார்ச் 16: எண்ணெய் மறுசுழற்சி குறித்து உணவுப் பொருள் விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலகம் சார்பில், உணவகம், இனிப்பகம், பேக்கரிகளில், பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில், நடைபெற்றது. ஈரோடு மாவட்ட உணவு கட்டுப்பாட்டு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட ஓட்டல்கள் சங்கத் தலைவர் ஆர்.தங்கவேல் வரவேற்றார்.

இதில், உணவுக் கட்டுப்பாட்டு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் பேசியதாவது: ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை திரும்ப உபயோகித்தால், கேன்சர் போன்ற நோய்கள், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். எண்ணெய்யை மறுசுழற்சி செய்து, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலான பயோ டீசலாக மாற்றிட செய்ய, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உணவுப் பொருள்கள் தயாரிப்போர், உணவகங்கள் மற்றும் பேக்கரி ஆகியவற்றில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுபடியும் பயன்படுத்தாமல், அதற்கான அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் ஒப்படைத்து, பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்கவேண்டும். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த நிதியாண்டில் 81 டன் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுசுழற்சி செய்வதற்காக பெறப்பட்டுள்ளது.

எனவே, எண்ணெய்யை பயன்படுத்தி உணவு பொருள்கள் தயாரிப்போர், மீண்டும் அந்த எண்ணெய்யை பயன்படுத்தாமல், மறுசுழற்சிக்காக ரூகோ நிறுவனத்திடம் வழங்கிடலாம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி செய்தவர்களுக்கு பரிசுகள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி – ஷர்ட்கள் வழங்கப்பட்டன. ஈரோடு மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன் நன்றி கூறினார்.

The post எண்ணெய் மறுசுழற்சி விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Food Safety Designation Office ,Erode… ,Oil Recycling Awareness Meeting ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...