×

திண்டுக்கல்லில் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திண்டுக்கல், மார்ச் 16: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான முதல் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சுகுணா முன்னிலை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டை குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் 35 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து நான்காம் காலாண்டிற்கு நடத்தப்பட்ட முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு செய்யப்பட்டது.

ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் ஒரு நபருக்கு திருமண மானியம் ரூ.25,000, 2 நபர்களுக்கு கண் கண்ணாடி மானியம் ரூ.8,000, வீட்டு வரி சலுகை மானியம் 2 நபர்களுக்கு ரூ.2850, சைனிக் பள்ளி கல்வி உதவித்தொகையாக ஒரு நபருக்கு ரூ.25,000, தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகையாக 5 நபர்களுக்கு ரூ.1,20,000 என மொத்தம் 11 பேருக்கு ரூ.1,80,580 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனை பொறுப்பு அலுவலர் ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் வீரமணி, கர்னல் ஜெகதீஸ், துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Grievance ,Day ,Dindigul Collector ,Veteran Welfare Assistant Director ,Sukuna ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...