- கடப்பாகம் ஏரி
- சென்னை
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கொச்தலையார்
- சென்னை கார்ப்பரேஷன்
- ஆசிய அபிவிருத்தி வங்கி
- தின மலர்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சியில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணியின் ஒரு பகுதியாக ஆசிய வளர்ச்சி வங்கி மானிய நிதியில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிக்கு ரூ.58.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணியில், ஏரியினை தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலபடுத்தி, ஏரியின் கரையை உயர்த்தி அமைத்து ஏரியின் கொள்ளளவு 3 மடங்காக அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணியினால், ஏரியினை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும். மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சீரான பாசன வசதி செய்து தரப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரூ.58.33 கோடி மதிப்பில் கடப்பாக்கம் ஏரி புனரமைப்பு appeared first on Dinakaran.