×

பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடக்கம்

மல்லசமுத்திரம், மார்ச் 15: மல்லசமுத்திரம் ஒன்றியத்தில், பல்வேறு பகுதிகளில் நேற்று, திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் பூமி பூஜை செய்து வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி கிராம திட்டத்தின் கீழ், பல்வேறு திட்ட பணிகளுக்கு புதுப்பாளையம் பஞ்சாயத்தில் ₹38.39 லட்சம் மதிப்பிலும், கருங்கல்பட்டி அக்ரஹாரம் பஞ்சாயத்தில் ₹36.71 லட்சம் மதிப்பிலும், கொளங்கொண்டை பஞ்சாயத்தில் ₹37.74 லட்சம் மதிப்பிலும், மின்னாம்பள்ளி பஞ்சாயத்தில் ₹19.56 லட்சம் மதிப்பிலும், பிள்ளாநத்தம் பஞ்சாயத்தில் ₹16.55 லட்சம் மதிப்பிலும் கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டது. ஒன்றிய செயலாளர் பழனிவேல், பிடிஓ.,க்கள் மலர்விழி, சுந்தரம் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Mallasamutram Union ,DMK West District ,Madurasend ,Bhumi Pooja ,Mallasamudram Union ,Dinakaran ,
× RELATED டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு