- திமுக அரசு
- கட்டோயம்பலம்
- Karungal
- கில்லியூர் தெற்கு யூனியன் டிஎம்கே
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- கிளியகுளம் பேரூராட்சி
கருங்கல், மார்ச் 15: கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் எல்லாருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை விளக்கம், கீழ்குளம் பேரூராட்சியில் வளர்ச்சி பணியின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் ஆகியவை கருங்கல் அருகே விழுந்தயம்பலம் பகுதியில் நடந்தது. கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் கோபால் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் கீழ்குளம் பேரூர் திமுக செயலாளர் எஸ்.எம்.கான், பேரூராட்சி தலைவி சரளா கோபால், வார்டு உறுப்பினர்கள் சோபா, லாசர், ஜான் ரஞ்சித் சிங், கிருஷ்ணன், கிள்ளியூர் பேரூர் செயலாளர் சத்தியராஜ், பாலப்பள்ளம் செயலாளர் ஆலஞ்சி மனோஜ், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ், தலைமை கழக பேச்சாளர் பிரவீன், சிறப்பு பேச்சாளர் ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post விழுந்தயம்பலத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.