×

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு

மயிலாடுதுறை, மே 16: மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து, ரோஜாப்பூ மலர் தூவி, ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 13ம் தேதி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது சிபிஎஸ்சி பள்ளிகள் உள்ளன. இதில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது. இப்பள்ளியில் பயிலும் மாணவர் குருநாதன் 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். மேலும் இப்பள்ளி மாணவிகள் ரேஷ்மி 474, மதிப்பெண்களும், விஸ்வஜா 471 மதிப்பெண்களும் எடுத்து பள்ளியில் இரண்டாம் இடமும், மூன்றாம் இடமும் பிடித்தனர். இந்த மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்ற நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களை ஆசிரியர்கள் ரோஜா பூ மலர் தூவி உற்சாகமாக சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்று பள்ளிக்குள்ளே அழைத்து சென்று ஆரத்தி எடுத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

பெற்றோர்கள் மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகி சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களும், பெற்றோர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சி பள்ளித் தலைவர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சட்டைநாதன், செயலாளர் ராமதுரை, பொருளாளர் செந்தில்குமார், தாளாளர் வெற்றிவேந்தன், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : CBSE ,Mayiladuthurai ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறையில் திடீர் பரபரப்பு உயர்...