×

தமிழ்நாட்டில் 48 கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாட்டில் 48 கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் உருது பள்ளியில் வகுப்பறைகளை அமைச்சர் சேகர் பாபு, எம்.பி.தயாநிதி மாறன் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு; வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 48 முதல்நிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

வெயில் காலம் என்பதால் கோயில்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் நலன்கருதி நீர் மோர் பந்தல், மேட் தரை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட உள்ளது. மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் நீர் மோர் வழங்கும் திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர் என்பதால் தான் வெளியின் தாக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். கோயிலுக்குள் கருங்கல் பதித்த தரை உள்ள இடங்களில் தரை விரிப்பு அமைக்கப்படும்.

உலகம் முருகன் பக்தர்கள் மாநாட்டை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஜூன் அல்லது ஜூலையில் பழனியின் முருக பகதர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது இவ்வாறு கூறினார்.

The post தமிழ்நாட்டில் 48 கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Sekarbapu ,Chennai ,Foundation ,Sekarbabu ,Shekhar Babu ,M. B. ,Shekarbapu ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...