×

விளையாட்டு விழா

 

போடி, மார்ச் 14: போடி அருகே முந்தல் சாலையில் உள்ள ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் 50வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர், தொடர்பாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் சொருபன் விளையாட்டு விழாவை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேராசிரியர் சிவப்பிரகாஷம ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போடி நகர் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் கமலநாதன், நந்தகுமரன் துணை முதல்வர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Sports festival ,Bodi ,50th Sports Festival ,Yela Farmers Union College ,Munthal Road ,College Principal ,Subramanian ,College Secretary ,Purushothaman ,College ,Dinakaran ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்