×

கடைக்காரருக்கு கத்திக்குத்து

சென்னை: தி.நகர் மேட்லி 2வது தெருவை சேர்ந்த கண்ணன் (47), தி.நகர் ராமேஸ்வரம் சாலை நடைபாதையில் செருப்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி அங்கு போதையில் வந்த 2 பேர், அருகில் உள்ள துணிக்கடையில் தகராறு செய்தனர். இதை கண்ணன் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த 2 பேர், அவரை சரமாரி தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பினர். போலீசார் விசாரணையில், எண்ணூர் காமராஜர் நகர் 7வது தெருவை சேர்ந்த மாபாஷா (25), அவரது நண்பர் டேவிட் (26) என தெரியவந்தது. மாபாஷா மீது 2 திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் ெதரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மாபாஷாவை கைது செய்தனர். அவனிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள டேவிட்டை தேடி வருகின்றனர்….

The post கடைக்காரருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kannan ,T. Nagar Madli 2nd Street ,T. Nagar Rameswaram Road ,
× RELATED கோவில்பட்டி அருகே நின்ற லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி