×

பென்னிகுக் நினைவாக லோயர் கேம்ப் அரசு பள்ளியில் குறுங்காடுகள்: 56 வகை மரக்கன்று நட்டு தொடக்கம்

 

கூடலூர், மார்ச் 13: பென்னிகுக் நினைவாக லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குறுங்காடு அமைக்க நன்செய் அறக்கட்டளையினர் 56 வகை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தனர். முல்லைப்பெரியாறு அணை கட்டி தென்தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய கர்னல் ஜான் பென்னிகுக் நினனவாக லேயர் கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளியில் நன்செய் அறக்கட்டளை சார்பாக 550 மரக்கன்றுகள் நட்டு உருவாக்க உள்ள கானகம் (குறுங்காடு) தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் முதல்கட்டமாக கருங்காலி, செங்கருங்காலி, கருக்குவச்சி, அரசு, .வேங்கை, மஞ்சக்கடம்பு, அத்தி, குமிழ், சரக்கொன்றை, கொன்னை, நாவல், கொடிக்காபுளி உள்ளிட்ட 56 வகை மரக்கன்றுகள் முடிவு செய்யப்பட்டது. மதுரை இணைத் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் (கண்காணிப்பு) விஜயலட்சுமி முதல் மரக்கன்று நடவு செய்து துவக்கி வைத்தார்,

தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்காட்சிக்கண்ணன், சுதாகர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருமாவளவன். வார்டு உறுப்பினர் தினகரன் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளி இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள், நன்செய் அறக்கட்டளையினர் கலந்து கொண்டனர்.

The post பென்னிகுக் நினைவாக லோயர் கேம்ப் அரசு பள்ளியில் குறுங்காடுகள்: 56 வகை மரக்கன்று நட்டு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Pennycook Memorial Gardens ,Lower ,Camp ,Government School ,Cuddalore ,Nansey Trust ,Lowercamp Government High School ,Pennycook ,Colonel ,John Pennycook ,South-East ,Mullaperiyar Dam ,Lower Camp Government School ,Dinakaran ,
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...