திருப்பூர், மார்ச் 13: கலெக்டர் கிறிஸ்துராஜிடம், திருப்பூர் தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை மூலம் பலரது உயிர்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சுகள் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சீராக தனியார் மருத்துவனைக்கு அழைத்து வருவதில்லை. திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்கள் செல்லுமாறு அறிவுறுத்தினாலும், மாறாக திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கே பாதிக்கப்பட்ட நோயாளிகளை அழைத்து செல்கிறார்கள்.
அந்த மருத்துவமனைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என வாய்மொழி உத்தரவும் அதிகாரிகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
The post இன்னுயிர் காப்போம் திட்டத்தில் நோயாளிகள் ஒரே மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக புகார் appeared first on Dinakaran.