×

போதை பொருளுக்கு எதிராக போராட்டம்: விஜயபாஸ்கர் நடத்தியது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்: அமைச்சர் விளாசல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கம் தற்போது அதிகரிப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போராட்டம் நடத்துவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம். தமிழ்நாட்டில் மறுவாழ்வு மையம் அதிகமாக இருக்கிறது.

ஏற்கனவே அன்னவாசல் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே செயல்பட்ட தனியார் மறுவாழ்வு மையத்தில் 50 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மனநலம் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து இருந்தனர். அது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தொகுதி தான். அங்கேயே அப்படி இருந்தது. அவர்களுக்கு இந்த அரசு மறுவாழ்வு கொடுத்தது. அதன்படி பாதிப்புக்குள்ளாகாத வகையில் இந்த அரசு, அனைவரையும் பாதுகாத்து கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

The post போதை பொருளுக்கு எதிராக போராட்டம்: விஜயபாஸ்கர் நடத்தியது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்: அமைச்சர் விளாசல் appeared first on Dinakaran.

Tags : Vijayabaskar ,Minister ,Vlasal ,Rangiyam ,Tirumayam ,Pudukottai ,Public Welfare Minister ,M.Subramanian ,Ex ,Health Minister ,C.Vijayabaskar ,AIADMK ,Tamil Nadu ,Satan ,
× RELATED கொலை மிரட்டல் வழக்கில் கோர்ட்டில்...