×
Saravana Stores

தொழில் மற்றும் உத்யோகம் வெற்றி பெற…

தொழில் வெற்றி பெறுவதற்கு முக்கியமானவர் சனி பகவானாக இருக்கிறார். ஆம், காலபுருஷனுக்கு (10ம்) பத்தாம் அதிபதியாகவும் (11ம்) பதினோராம் அதிபதியாகவும் இருப்பதால், அவரே தொழில் மற்றும் உத்யோகத்திற்கு காரணமாகிறார். பொதுவாகவே, எந்த ஒரு தொழிலும் தன வருவாய் தொடர்ந்து இருக்குமாயின் தொழிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தனவருவாய் தட்டுப்பாடு வந்தாலும் தனவருவாயில் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தாலும், தொழில் சிறக்கவும் தொழில் தொடரவும் வாய்ப்பின்றி போகும். அக்காலத்தில் மற்றொருவரிடம் அல்லது ஒரு நிறுவனத்தில் உத்யோகம் செய்வதை அடிமைத் தொழில் என்பர். காலப் போக்கில் அடிமைத்தொழில் என்ற வார்த்ததை மறைந்து போனது. சுயதொழில் செய்வோருக்கும் முதலாளியாக அமர்ந்து பணி செய்வதற்கும் இரண்டாம் பாவகமாகிய (2ஆம்) தனஸ்தானமும் (10ஆம்) பத்தாம் பாவகமும் வலிமையாக இருக்க வேண்டும். பத்தாம் பாவத்தில் (10ஆம்) வலிமையாக கிரகங்கள் இருப்பின், கண்டிப்பாக முதலாளியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

யாருக்கு தொழில் சிறப்பாக அமையும்

*லக்னத்திற்கு சந்திரன் அமர்ந்து, சந்திரனுக்கு 2-ல் சனி அமர்ந்த ஜாதகருக்கு தொழில் மேன்மை அடையும் அமைப்புகள் உண்டு.
*லக்னத்திற்கு 4-ல் சனி அமர்ந்து, 3-ல் சந்திரன் அமர்ந்தாலும், சுயதொழிலால் மேன்மை அடைவர்.
*சனி, மேஷத்தில் அமர்ந்து நீசம் அடைந்திருந்தால், தொழிலில் மேன்மை அடையும் வாய்ப்புகள் குறைவு.
*னியுடன் மேஷத்தில், செவ்வாய் இருந்தால், பார்வை செய்தாலும், அதுபோலவே, சூரியன் உடன் இருந்தாலும் பார்வை செய்தாலும் நீசபங்கம் என்ற அமைப்பில் சனி மேன்மை அடைகிறார். ஆதலால், தொழில் மேன்மை அடையும் வாய்ப்புகள் உண்டாகும்.
*ஒருவருக்கு இரண்டாம் பாவகம் (2ம்) என்ற தனஸ்தானம் மற்றும் (6ம்) ஆறாம் பாவகம் என்று சொல்லக் கூடிய கடன் ஸ்தானம் வலிமையாக இருப்பின் சுயதொழிலைவிட ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதே சிறப்பைத் தரும்.
*சிலருக்கு பத்தாமிடம் (10ம்) இடம் என்று சொல்லக் கூடிய உத்யோக ஸ்தானத்தில் சனி இருந்தால், அவர் செய்யக் கூடிய பணியை அவரைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாத சூழ்நிலையை உருவாக்கும்.எந்த தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும்எந்த ஒரு நபருக்கும் சந்திரனுக்கும் முன் பின் கிரகங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்களை செய்தால் சிறப்பாக இருக்கும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
*சந்திரனுக்கு முன் பின் சூரியன் – செவ்வாய்: டெக்னிக்கல் தொடர்பான தொழில் செய்தால் சிறப்பு.
*சந்திரன் முன் பின் செவ்வாய் – சனி: கன்ஸ்டிரக்ஸன் தொடர்பான தொழில்கள் செய்வதால் சிறப்படைவர்.
* சந்திரனுக்கு முன்னே அல்லது பின் வியாழன் – சுக்ரன் தொடர்பிருந்தால் நகை வியாபாரம் அல்லது வைர வியாபாரம் அல்லது டெக்ஸ்டைல் தொடர்பான தொழில்கள் செய்தால் சிறப்புண்டு.
*சந்திரனுக்கு முன் பின் புதன் இருந்தால், தரகு போன்ற தொழில்கள் செய்யலாம் அல்லது ஒரு பொருளை மற்றொருவரிடம் வாங்கி விற்று கமிஷன் அடிப்படையில் தொழில் செய்யலாம்.
*இது போல இன்னும் கிரகங்களின் தொடர்பைப் பொருத்து ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொழிலை செய்தால், சிறப்படையலாம். ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தின் அடிப்படையில், தொழில் செய்தால் சிறப்பைத் தரும்.

The post தொழில் மற்றும் உத்யோகம் வெற்றி பெற… appeared first on Dinakaran.

Tags : Lord ,Saturn ,Kalapurusha ,Dinakaran ,
× RELATED முருகப் பெருமான் செவ்வாய் வழிபாடு..!!