திருப்பூர்: வெள்ளகோவில் அருகே 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி வெள்ளகோவில் பகுதியில் நடந்த தேர் திருவிழா கலை நிகழ்ச்சிக்கு சிறுமி சென்றுள்ளார். கலை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை 6 பேர் கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை தேடி வந்தனர். சிறுமி வழக்கில் பிரபாகர், மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்த போலீஸ் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
The post 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் – 2 பேர் கைது appeared first on Dinakaran.