×
Saravana Stores

தீபாவளி பண்டிகை; புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் கடும் கூட்டம்!

திருப்பூர்: தீபாவளி பண்டிகைக்காக சொந்த மாநிலங்கள் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் கடும் கூட்டம். எர்ணாகுளத்தில் இருந்து டாடா நகர் செல்லும் ரயில், ஆழப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ரயிலில் முண்டியடித்து ஏறினர். சிலர் அவரச வெளியேற்ற ஜன்னல் வழியாகவும் ஏறி உள்ளே சென்றனர். கடந்த ஆண்டைவிட தற்போது 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும், ஒரு வார விடுமுறையை பின்னலாடை நிறுவனங்கள் அளித்துள்ளதால் 80% தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தீபாவளி பண்டிகை; புலம்பெயர் தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் கடும் கூட்டம்! appeared first on Dinakaran.

Tags : Diwali Festival ,Tiruppur Railway Station ,Tiruppur ,Ernakulam ,Tata Nagar ,Alleppey ,Tanbad ,Dinakaran ,
× RELATED லண்டனில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்..!!