×

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

சேலம், மார்ச் 12: ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஒன்றிய அரசை கண்டித்தும் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்த பட்சவிலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், நிர்வாகிகள் சந்திரமோகன், தங்கவேல், நடராஜன், செல்வராஜ், கோவிந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

The post விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Fort Maidan ,Delhi ,Union Government ,United Farmers Front ,District Coordinator ,Ramamurthy ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...