×

வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

பெரம்பலூர்,மார்ச் 12: வேப்பந்தட்டையில் அரசுக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக எச்ஐவி, எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக எச்ஐவி -எய்ட்ஸ் நோய் குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நேற்று (11ஆம்தேதி)நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்துறை தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.செஞ்சருள் சங்கத்தின் திட்ட அலுவலர் பேராசிரியர் அன்பழகன் வரவேற்றார்.

பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் மாவட்டத் திட்ட மேலாளர் சுமதி சிறப்புரை யாற்றினார். கிருஷ்ணா புரம் அரசு மருத்துவமனை ஆற்றுப்படுத்துணர் பழனிவேல்ராஜா செஞ் சுருள் சங்கத்தின் செயல் பாடுகள்,பால்வினைநோய் குறித்த கருத்துரை வழங்கி னார். எச்.ஐ.வி கூட்டமைப்பின் பணியாளர் செல்வி, மற்றும் பேராசிரியர்கள் கலியமூர்த்தி, கவிஞர் முத்துமாறன், மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர் பூபாலன் நன்றி கூறினார்.

 

The post வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Veppanthatta Government College ,Perambalur ,Centurul Sangam ,Government College ,Veppanthattai ,Centurul ,Sangam ,Govt Arts and Science College ,Veppanthatta ,Perambalur District… ,Govt College ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி