×

மனு கொடுத்த 30 நிமிடத்தில் நடவடிக்கை: அரியலூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 

அரியலூர், மார்ச் 12: அரியலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 436 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

முன்னதாக மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் ரூ.1,38,000 மதிப்பிலும் மற்றும் தேசிய அறக்கட்டளை சட்டம் 1999-ன் படி, நான்கு வகையான மாற்றுத் திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியோர், ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோர், மூளை முடக்கு வாதம் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனுடையோர் ஆகியோர்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலர் நியமனம் உள்ளுர் அளவிலான குழுமத்தால் 6 பேருக்கு பாதுகாவலர் நியமன சான்றுகளை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, வழங்கினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post மனு கொடுத்த 30 நிமிடத்தில் நடவடிக்கை: அரியலூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,People's Grievance Day ,Ariyalur Collector ,Collector ,Anne Mary Swarna ,Dinakaran ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...