×

நன்னடத்ைத உறுதிமொழி பத்திரம் அளித்த 262 ரவுடிகள் எம்பி தேர்தலுக்கு முன்ெனச்சரிக்கை வேலூர் ஆர்டிஓ முன்னிலையில்

ேவலூர், மார்ச் 12: வேலூர் மாவட்டத்தில் தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கையாக 262 ரவுடிகள் ஆர்டிஓ முன்னிலையில் ஆஜராகி நன்டத்தை உறுதி மொழி பத்திரம் வழங்கியுள்ளனர். மேலும் 119 பேர் ஆஜராக உத்தரவிட்டு, கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தல் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி அனைத்து அரசியில் கட்சியினர் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் தேர்தல் அமைதியான முறையில் நடத்துவதற்காக அந்தந்த மாவட்டங்களில் ரவுடி பட்டியலை சேகரித்து, அவர்களை கண்காணிக்கவும், அதில் திருந்திய ரவுடிகள் குறித்து நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி எஸ்பி மணிவண்ணன் உத்தரவின்பேரில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கையாக 262 ரவுடிகள் ஆர்டிஓ முன்னிலையில் ஆஜராகி எந்த வித குற்றசம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன் என்று நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்தனர். மேலும் 119 பேருக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 69 குற்றவாளிகள் சிறையில் உள்ளனர். மேலும் பழைய ரவுடிகளும், நன்னடத்தை உறுதிமொழி பத்திரம்கொடுத்த அனைத்து ரவுடிகளும் கண்காணிப்பில் உள்ளனர் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நன்னடத்ைத உறுதிமொழி பத்திரம் அளித்த 262 ரவுடிகள் எம்பி தேர்தலுக்கு முன்ெனச்சரிக்கை வேலூர் ஆர்டிஓ முன்னிலையில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,RTO ,Vellore district ,Vellore RTO ,Dinakaran ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...