×

குமரி மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது பொய் தகவலை பரப்பும் கும்பல் சைபர் கிரைம் போலீஸ் கண்காணிப்பு

நாகர்கோவில், மார்ச் 12: குமரி மாவட்டத்தில் சமீப காலங்களாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை மையப்படுத்தி சமூக வலை தளங்களில் பல்வேறு விதமான பொய் தகவல்களை சில இயக்கங்களை சேர்ந்தவர்கள், போலி சமூக போராளிகள் பரப்பி வருகிறார்கள். சமீபத்தில், கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமார், விவசாயிகளின் போராட்டத்தின் போது வாகனங்களை விடுவிக்க பணம் பெற்றதாக பொய்யான தகவலை சமூக வலை தளங்களில் பரப்பினர். இந்த பிரச்சினை குறித்து டி.எஸ்.பி. மகேஷ்குமாரை தொடர்பு கொண்டு கேட்ட போது, நீலகிரி, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி உள்ளேன். காவல்துறை பணியை மிகவும் நேசிப்பவன். எனது பணியில் எந்த தவறும் வந்து விட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். என்னை பற்றி வதந்தி பரப்புகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் சிலரை மையமாக வைத்து சில அமைப்புகள் வேண்டுமென்றே இவ்வாறு பொய்யான, போலியான தகவல்களை சமூக வலை தளங்களில் பரப்பி வருவதும், ஆர்ப்பாட்டம், போராட்டம் என்ற பெயரில் அந்த அதிகாரிகள் மீது களங்கத்தை ஏற்படுத்த முயல்வதும் அதிகரித்து உள்ளது. தவறும் செய்யும் அதிகாரிகள், லஞ்சம் கேட்கும் போலீசார், மாமூல் வாங்கும் அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறத்துவதில் தவறு இல்லை. அதே சமயத்தில் வேண்டுமென்றே சில அதிகாரிகள், காவல்துறையினர் மீது போலியான தகவல்களை பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய சமூக வலை தள வளர்ச்சியை பயன்படுத்தி பொய்யான தகவல்கள் பரப்பபட்டு வருவதால் இது போன்ற போலியான கும்பல்களை, போலி போராளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

The post குமரி மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது பொய் தகவலை பரப்பும் கும்பல் சைபர் கிரைம் போலீஸ் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Nagercoil ,Kanyakumari ,DSP ,Maheshkumar ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...