×

சிறந்த அறிவியல் ஆசிரியராக விருது பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ்: அமைச்சர் வழங்கினார்

சென்னை: சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலா ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
மாணாக்கர்களின் அறிவை வடிவமைப்பதிலும், அறிவியல் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும், உயர் கல்வியில் மாணாக்கர்கள் அறிவியல் துறையினை தேர்ந்தெடுப்பதற்கும் மற்றும் அறிவியலாளர்களாக உருவாகுவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அறிவியல் நகரம் 2018- 19 முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. 2022- 23 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2022-23ம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2022- 23ம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதை உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் கார்த்திக் மற்றும் அறிவியல் நகரம், முதன்மைச் செயலர், துணைத் தலைவர் தேவ் ராஜ் தேவ் ஆகியோர்களின் முன்னிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் வழங்கினர். சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலா ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

The post சிறந்த அறிவியல் ஆசிரியராக விருது பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ்: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Rajakanappan ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்