×

2 ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சோழவரம் அருகே இரு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை, சிபிஐ விசாரிக்க கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்திபன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட சதீஷ், முத்து சரவணன் ஆகியோர் சோழவரம் அருகே பதுங்கியிருந்தபோது பிடிக்க முயன்றதாகவும், தங்களை தாக்கிவிட்டு தப்பித்து ஓடியதால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பூந்தமல்லி துணை ஆணையர் ஜவஹர் தலைமையிலான காவல்துறையினர் தெரிவித்தனர். என்கவுன்டர் சம்பவத்தில் சந்தேகம் உள்ளதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி ரவுடி முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி கடந்த பிப். 12ம் தேதி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, சிபிசிஐடி விசாரணை நடத்தட்டும். திருப்தி இல்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று கூறி மனுவை முடித்து வைத்தார்.

The post 2 ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI ,CHENNAI ,Cholavaram ,Satish ,Muthu Saravanan ,AIADMK ,Parthiban ,Padiyanallur ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ...